வறுமையின் காரணமாக 16 ஆண்டுகளாக லாரியை ஓட்டும் 54 வயது பெண்

குடும்ப வறுமையின் காரணமாக 16 ஆண்டுகளாக லாரியை ஓட்டும் 54 வயது பெண், தனது மகன்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-04-30 02:15 GMT

சங்கிரிஅடுத்த பெரியபனங்காட்டை சேர்ந்தவர் கோபால். இவர் கடந்த 40 ஆண்டுகளாக லாரி ஓட்டி வருகிறார். இவரது மனைவி செல்வமணி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

வறுமையின் காரணமாக கடந்த 16 ஆண்டுகளாக கணவருடன் சேர்ந்து செல்வமணியும் லாரியை ஓட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செல்வமணி கேன்சரால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகிறார்.

ஆனாலும் லாரி ஓட்டுவதை நிறுத்தவில்லை. இவரது மூத்த மகன் அருள்முருகன். எம்பிஏ., முடித்துவிட்டு இவரும் வேலை கிடைக்காததால் லாரி ஓட்டி வருகிறார். இளைய மகன் மோகன்பிரபு. ஐடிஐ முடித்துவிட்டு டூவீலர் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.

இது குறித்து செல்வமணி கூறுகையில், வறுமையின் காரணமாக எனக்கு கேன்சர் நோய் இருந்தும், தங்களை போல் மகனும் லாரி ஓட்டி சிரமப்பட்டு வருவது வேதனையாக உள்ளது.

எனவே, தனது மகன்களுக்கு படித்த படிப்பிற்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். கிருஷ்ணகிரி டோல்கேட்டில் நடந்த இந்த சந்திப்பின் போது, மனித உரிமை தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் சுதா உடனடிருந்தார்.

Tags:    

Similar News