பூதப்பாண்டியில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய யானை உயிரிழந்தது

வனத்தில் இருந்து ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தியதோடு மக்களை அச்சுறுத்திய காட்டு யானை உயிரிழந்தது.

Update: 2021-06-23 10:30 GMT

பூதப்பாண்டியில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய யானை உயிரிழந்தது

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே திடல் பகுதியில் கடந்த ஒரு வாரமாக ஒரு காட்டு யானை சுற்றி திரிந்தது.

விவசாய நிலங்கள் மற்றும் பயிர்களை நாசம் செய்ததோடு கிராம மக்களையும் அச்சுறுத்தி வந்தநிலையில் அந்த காட்டு யானை இன்று உயிரிழந்தது.

நேற்று முதல் உயிருடன் அசைவின்றி இருந்த யானையை மீட்ட வனத்துறை நெல்லை மாவட்ட வன கால்நடை மருத்துவப் பிரிவு டாக்டர் மனோகரன், தேனி மாவட்ட வன கால்நடை மருத்துவர் கலைவாணன், ஓசூர் வன கால்நடை மருத்துவர் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் மருத்துவ சிகிச்சை அளித்து வந்தனர்.

மேலும் மருத்துவ குழுவினரும், 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினரும் யானைக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி யானை திடீரென உயிரிழந்து. யானையின் உடலை மீட்ட வனத்துறை அதிகாரிகள், உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News