கேரளாவில் வாபஸ் பெறப்பட்ட ஊரடங்கு -குமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்

கேரளாவில் ஊரடங்கு வாபஸ் பெறப்பட்ட நிலையில் குமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Update: 2022-02-15 00:37 GMT

கொரோனா, ஓமிக்கிரான் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்ததை தொடர்ந்து நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கேரளா மாநிலத்தில் ஞாயிற்று கிழமை ஒருநாள் முழு ஊரடங்கை அம்மாநில அரசு நடைமுறைப்படுத்தியது.

அதன்படி கடந்த 2 மாதங்களாக கேரளாவில் நடைமுறையில் இருந்த ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு திரும்ப பெறப்பட்டத்தை தொடர்ந்து சர்வதேச புகழ்பெற்ற கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. நேற்றே வந்து குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் சூரிய உதயம் மற்றும் அஸ்தம காட்சியை கண்டு ரசித்ததோடு கடற்கரை பகுதிகளில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கூடி மகிழ்ந்தனர்.

இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது முழு ஊரடங்குக்கு பின்னர் கன்னியாகுமரிக்கு வருவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், இயற்கை காட்சிகள், குறைந்த விலையில் கிடைக்கும் கடல் உணவு வகைகள், சங்கு சிப்பி உள்ளிட்ட கடல் பொருட்கள் போன்றவற்றை வாங்கி மகிழ்ந்தது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே நீண்ட காலமாக வியாபாரம் இல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி சுற்றுலா தள வியாபாரிகள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News