பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி குமரியில் அரசு சார்பில் மரியாதை

காமராஜரின் 119 ஆவது பிறந்தநாளையொட்டி குமரி மாவட்டத்தில் அவரது திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2021-07-15 12:15 GMT

காமராஜர் பிறந்தநாளில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த், தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.பி விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி ஆகியோர் மரியாதை செலுத்திய காட்சி.

பெருந்தலைவர் காமராஜரின் 119 வது பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அவரது பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

கன்னியாகுமரியில் மணி மண்டபத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவச் சிலைக்கு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலரும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோன்று நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜரின் முழு உருவ திருவுருவச் சிலைக்கு அதிமுக, பாஜக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் பிரமுகர்களும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோன்று தக்கலை, மார்த்தாண்டம், அருமனை, மயிலாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பெருந்தலைவர் காமராஜரின் 119 வது பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

Tags:    

Similar News