குமரியில் அரசு பேருந்து மோதியதால் முதியவரின் இரு கால்களும் துண்டானது

குமரியில் அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதியதால் முதியவரின் இரு கால்களும் துண்டானது

Update: 2022-03-12 05:00 GMT

கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்தார்.

அப்போது பேருந்து நிலையத்தினுள் சீதப்பால் வழித்தடத்தில் இயக்கப்படும் நகர்ப்புற பேருந்து அதிவேகமாக வந்ததோடு பேருந்து ஓட்டுனரின் கவன குறைவால் கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்திற்காக காத்திருந்த முதியவர் மீது மோதி ஏறி இறங்கியது.இதனை பார்த்து சக பயணிகள் அலறல் சப்தம் போட்ட நிலையில், அசம்பாவித சம்பவத்தை உணராத பேருந்து ஓட்டுநர் பேருந்தை மீண்டும் ரிவெர்சில் எடுத்தால் மீண்டும் முதியவர் மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியது.

இதில் முதியவரின் இரு கால்களும் துண்டிக்கப்பட்டது. இதனிடையே விபத்து ஏற்பட்டு 1 மணி நேரம் கடந்தும் ஆம்புலன்ஸ் வராத நிலையில் முதியவர் மயக்கம் அடையும் நிலைக்கு சென்றார்.மேலும் கவன குறைவால் விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனரும், போக்குவரத்து அதிகாரிகளும், அங்கிருந்த போலீசாரும் உதவாத நிலையில், சம்பவ இடத்தில் இருந்த சக பயணிகள் ஆட்டோ மூலம் முதியவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே அரசு பேருந்துகள் தகர டப்பா பேருந்துகளாக இருக்கும் நிலையில் பேருந்து நிலையத்தில் நுழையும் பேருந்துகள் ஜெட் வேகத்தில் இயக்கப்படுவதால் தினம் ஒரு விபத்துகள் ஏற்படுகிறது.இந்நிலையில் இது குறித்து பல்வேறு புகார்கள் அளித்தும் போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் நூற்றுக்கணக்கான பயணிகள் நடமாடும் பேருந்து நிலையத்திற்க்கு வரும் பேருந்துகள் மிதமான வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும்.அதி வேகம் காட்டும் ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது, மேலும் இச்சம்வவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News