நாகர்கோவிலில் திமுகவினரால் போக்குவரத்து நெரிசல்

நாகர்கோவிலில் சாலையில் காரை நிறுத்திவிட்டு சென்ற திமுகவினரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2022-03-11 01:45 GMT

நாகர்கோவில் அவ்வை சண்முகம் சாலையில் திமுகவினர் வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரதான சாலைகளில் ஒன்றாக அமைந்துள்ளது அவ்வை சண்முகம் சாலை. இந்த சாலையில் தீயணைப்பு நிலையம், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் நிறைந்து காணப்படுவதால் எப்போதும் பரபரப்பாகவும் 24 மணி நேரம் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையாகவும் காணப்படும்.

இதனிடையே இந்த சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள பூங்காவை சீர் செய்து புதிய பூங்கா அமைக்கும் பணி மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி புதிய பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்ற நிலையில் இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்துகொண்டு பூங்கா அமைக்கும் பணியை தொடங்கிவைத்தார்.

இதனிடையே மாநகராட்சி மேயர் உடன் ஏராளமான கார்களில் வந்த திமுகவினர் தங்கள் கார்களை சாலையிலேயே நிறுத்தி விட்டு சென்றதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்ட நிலையிலும் அதனை கண்டுகொள்ளாத திமுகவினர் காரை சாலை ஓரம் நிறுத்தாமல் நிகழ்ச்சிக்கு சென்றதால் மருத்துவமனைக்கு செல்பவர்களும் அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்கு சொல்பவர்களும் பெரும் பாதிப்பை சந்தித்தனர். மேலும் மாநகராட்சி மேயர் மற்றும் அவருடன் வந்த திமுகவினரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News