குமரி மாவட்டத்தில் அதிகரித்த வாக்கு சதவீதம்

Update: 2021-04-07 05:45 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் பொதுத் தோ்தலில் வாக்குப்பதிவு கணிசமாக உயா்ந்துள்ளது.

கன்னியாகுமரி மக்களவை இடைத் தோ்தல் மற்றும் சட்டமன்றத்திற்கான பொதுத்தோ்தல் நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மக்கள் ஆா்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் காத்து நின்று வாக்களித்தனா். இரவு 7 மணி நிலவரப்படி கன்னியாகுமரி 75.34 சதவீதம், நாகா்கோவில் 66.70, குளச்சல் 67.45, பத்மநாபபுரம் 69.82, விளவங்கோடு 66.90, கிள்ளியூா் 65.85 சதவீதம் என்ற விகிதத்திவ் வாக்குகள் பதிவாகியிருந்தன. மாவட்டத்தில் சராசரி வாக்குப்பதிவு 68.67 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாக்குப்பதிவு நிறைவடைந்ததை தொடா்ந்து, ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, போலீஸாா் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான நாகா்கோவில் கோணம் தொழில்நுட்ப கல்லூரிக்கு கொண்டுசெல்லப்பட்டன.

Tags:    

Similar News