குமரியில் மனு கொடுக்க வந்த முதியவர்கள்: தேடி வந்து மனு பெற்று எஸ்பி

மனு கொடுக்க வந்த முதியவர்களை தேடி சென்று மனு வாங்கிய குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

Update: 2022-04-27 09:00 GMT

குமரியில் மனு காெடுக்க வந்த முதியவர்களை அவர்களது இடத்திற்கே தேடி சென்று மனு வாங்கிய எஸ்பி.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் பொது மக்களின் பிரச்சனைகள் குறித்த மனுக்களை நாள்தோறும் பெற்று அது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இன்று வழக்கம் போல் பொது மக்கள் தங்கள் பிரச்சனைகள் குறித்த மனுக்களை அளிக்க வந்திருந்தனர்.

அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முதியவர்கள் பலர் மனுவினை அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். இதனை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் முதியவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று மனுவினை வாங்கி மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

மேலும் மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 04652 220167 என்ற தொலைபேசி எண்ணை மூத்த குடிமக்கள் தொடர்புகொண்டு அவர்கள் புகார் அளிக்கலாம். புகார் தொடர்பான விவரங்களை தெரிவித்தவுடன் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் அவரது வீடுகளுக்கே நேரடியாகச் சென்று போலீசார் புகார் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள். மனு அளிப்பதற்காக முதியவர்கள் நீண்ட தூர பயணம் மேற்கொண்டு தனது அலுவலகம் வர தேவையில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News