குமரியில் மகாசமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்வு: 300 பேர் மீது வழக்கு

குமரி முக்கடல் சங்கம பகுதியில் நடைபெற்ற மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்வில், விதிமுறையை மீறிய 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..

Update: 2021-09-22 00:45 GMT

கன்னியாகுமரியில்  நடைபெற்ற மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி.

இந்தியாவில் பிரபலமான வழிபாடுகளில் ஒன்றான கங்கா ஆரத்தி போன்று முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நேற்றுமுன்தினம்  மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செங்கோல் ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள், மடாதிபதிகள், அரசியல் மற்றும் இந்து இயக்க தலைவர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதிக அளவில் கூட்டம் சேர கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. நிகழ்ச்சியில் கொரோனா விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறி அதிக அளவில் கூட்டம் கூடியதை தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் இந்து இயக்க தலைவர்கள் உட்பட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

Tags:    

Similar News