வங்கி அதிகாரிகள் பேசுவதாக வரும் அழைப்புகளை தவிர்த்து விடுங்கள்-பொதுமக்களுக்கு காவல்துறை அட்வைஸ்

குமரி மாவட்டத்தில் சுமார் 19 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது-காவல்துறை தனிப்படை அமைத்து சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Update: 2021-06-13 10:30 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அரசு அதிகாரிகள், வயதானவர்கள், சமூகத்தில் அந்தஸ்தில் இருப்பவர்கள் போன்றவர்களிடம் வங்கியில் இருந்து அழைப்பதாக கூறி தங்களது ஏடிஎம் கார்டு காலாவதியாகி விட்டதாகவும், கார்டில் இருக்கும் 16 இலக்க நம்பரை கூறினாள் கார்டை புதுப்பித்து தருவதாக அழைப்புகள் வருகிறது.

இதன் மூலம் குமரிமாவட்டத்தில் சுமார் 19 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது, இதனிடையே இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை தனிப்படை அமைத்து சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி அழைப்பு வந்தால் அதனை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது, மேலும் காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.செல்போன் மட்டும் அல்லது தொலைபேசியில்( landline) தொடர்புகொண்டு வங்கிகணக்கு விபரங்கள் மற்றும் OTP கேட்டு ஏமாற்றும் சைபர்குற்றம் அதிகரித்துள்ளது.

வயதானவர்கள், குறிப்பாக அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். வங்கியில் இருந்து பேசுவதாக கூறினால் எந்த விபரங்களையும் கொடுக்க வேண்டாம், தேவைப்பட்டால் வங்கிக்கு நேரடியாக சென்று விபரங்களை அளிக்க வேண்டும் என போலீசார் எச்சரித்து உள்ளனர். 

Tags:    

Similar News