ரூ. 10.50 கோடி மதிப்பில் நல திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ..அன்பரசன் வழங்கல்

கடந்த 4 மாதங்களுக்கு முன்‌ சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட 929 மனுக்களில் 760 தீர்வு காணப்பட்டுள்ளது.

Update: 2022-05-18 13:15 GMT

விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்

காஞ்சிபுரம் மாவட்டம் ,உத்தரமேரூரில் நடந்த குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டதில் மொத்தம் 929 மனுக்கள் பெறப்பட்டதில் 760 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கான நலத்திட்ட உதவிகள் ரூ.10.51 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது என்றார் தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்

முதியோர் ஓய்வூதியம்,இலவச தையல் இயந்திரம்,குளம் சீரமைப்பு,சாலை வசதி,இலவச வீட்டு மனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.மீதம் உள்ள 169 மனுக்களும் விரைவில் தீர்வு காணுமாறு ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் 52 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.20.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.13515 விவசாயிகளுக்கு ரூ.89.41 கோடி மதிப்பில் பயிர்க்கடன்களும்,18433 ஏழைகளுக்கு ரூ.58.8 கோடி மதிப்பில் 5 பவுன் வரையிலான நகைக்கடன்களும் தள்ளுபடி செய்திருக்கிறோம்.தேர்தல் வாக்குறுதிகள் 505 இல் 300 நிறைவேற்றப்பட்டுள்ளது.

மகளிர்க்கு பேருந்துகளில் இலவச பயணம்,கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் தொகை,காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என திமுக அரசின் சாதனைப் பட்டியல் நீள்கிறது. கர்ப்பிணிப்பெண்களாக இருந்தால் 12 மாதங்களுக்கு விடுப்பு வழங்கிய ஒரே அரசு இந்தியாவிலேயே திமுக அரசாகத்தான் இருக்கும் என்றும் பேசினார்.

விழாவிற்கு ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமை வகித்தார்.மக்களவை உறுப்பினர் க.செல்வம், எம்.எல்.ஏ.க.சுந்தர்,உத்தரமேரூர் ஒன்றியக்குழு தலைவர் ஹேமலதா ஞானசேகரன், உத்தரமேரூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.சசிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் சிவ.ருத்ரய்யா வரவேற்று பேசினார்.விழாவில் உத்தரமேரூர் ஒன்றியக் குழு துணைத் தலைவர் கே.வசந்தி குமார்,மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குநர் கே.செல்வராஜ் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News