காஞ்சிபுரத்தில் 2019-2020ம் ஆண்டில் சிறந்த பள்ளியாக களத்தூர் பள்ளி தேர்வு

2019- 20 ஆம் ஆண்டில் சிறந்தப்பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட களத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் விருது வழங்கினார்.

Update: 2022-01-24 15:00 GMT

சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட களத்தூர் பள்ளி

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட களத்தூர் கிராமத்தில் இயங்கி வருகிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.இப்பள்ளி கடந்த 2019 - 20 ஆம் ஆண்டின் சிறந்த பள்ளிக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.

இதற்கான விருதினை தமிழக தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களால் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது.

இவ்விருதினைப் பெற்ற  இப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் மாவட்ட உதவி திட்ட அலுவலரை (பொ)   சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Tags:    

Similar News