பார்வை திறன் குறைபாடுள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தொழில்நுட்ப திறன் பயிற்சி

காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான பார்வை திறன் குறைபாடுகள் உள்ள 37 ஆசிரியர்களுக்கு தகவல் தொழில் நுட்ப பொருட்கள் வழங்கப்பட்டது

Update: 2022-05-20 14:30 GMT

பார்வையற்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்றுகொடுப்பதற்கு தேவையான கணினி தொழில் நுட்பக் கருவிகள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் 37 பார்வையற்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்றுகொடுப்பதற்கு தேவையான கணினி தொழில் நுட்பக் கருவிகள் வழங்கப்பட்டன.

மேலும் தகவல் தொழில்நுட்ப ஒரு நாள்‌ திறன் பயிற்சி வகுப்பில் பல்வேறு சந்தேகங்களை சிறப்பு நிபுணர்கள் சரிசெய்யும் ஆலோசனைகளை வழங்கினார்.ஹோப் பவுண்டேஷன்,டெல் நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் ஆகியன இணைந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி வழிகாட்டுதலின்படி ,காஞ்சிபுரம் ராணி அண்ணாத்துரை மேல்நிலைப்பள்ளியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

கணினி தொழில் நுட்பக் கருவிகளை மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன் தொடக்கி வைத்தார்.ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் உதவித் திட்ட அலுவலர் பாலமுருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இமானுவேல்,ஹோப் நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்,பயிற்சியாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஹோப் நிறுவன மாநில ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் கலந்து கொண்டு 37 பார்வையற்ற ஆசிரியர்களுக்கு கணினி தொழில்நுட்பக் கருவிகளை வழங்கி பேசினார்.நிறைவாக அண்ணலரசு நன்றி கூறினார்.


Tags:    

Similar News