ஸ்ரீபெரும்புதூர் மனுநீதி நாள் முகாமில் 442 பயனாளிகளுக்கு ரூ. 2.19 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்…

Welfare Schemes -ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள சோகண்டி கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ரூ. 2.19 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.

Update: 2022-11-09 10:00 GMT

நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.

Welfare Schemes -காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், சோகண்டி கிராமத்தில் இன்று நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 442 பயனாளிகளுக்கு 2 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் விவரங்கள் குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், எந்த திட்டம் பற்றிய சந்தேகம் ஏதேனும் இருப்பின் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்து தங்களின் வாழ்க்கை தரத்தை பொதுமக்கள் மேம்படுத்தி கொள்ளலாம். மனுநீதி நாள் முகாம் நடைபெறுவதை முன்னிட்டு வருவாய் கோட்டாட்சியர் முகாமிட்டு பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

அதனை முறையாக பரிசீலித்து, பெறப்பட்ட மனுக்களில் மாற்றுதிறனாளி நலத்துறை மூலம் தனித்துவம் வாயந்த தேசிய அடையாள அட்டை 7 நபர்களுக்கும், வருவாய்துறை மூலம் அடிப்படை தேவைகளான இலவச வீட்டுமனைப் பட்டா 127 நபர்களுக்கும், முதியோர் உதவிதொகை 116 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பழங்குடியினர் இனச்சான்று 4, மின்னணு குடும்ப அட்டை 12 நபர்களுக்கும், பழங்குடியினர் நல வாரிய அட்டை 15 நபர்களுக்கும், மருத்துவ காப்பீடு அட்டை 50, ஊரக வளர்ச்சித் துறை மூலம் மகளிர் சுய உதவிக்குழு வங்கிக்கடன் 10 நபர்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் இலவச தையல் இயந்திரம் ஒரு நபருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, தொழில்துறை மூலம் தொழில் கடன் 5 நபர்களுக்கும், வேளாண்மைத்துறை மூலம் வேளாண் இடுபொருட்கள் 5 நபர்களுக்கும், தோட்ட கலைத்துறை மூலம் நாற்றுகள் 3 நபர்களுக்கும், கூட்டுறவுத்துறை மூலம் சுயதொழில் கடன் மற்றும் பயிர்க்கடன் 26 நபர்களுக்கும், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஊட்டச்த்து பெட்டகம் 11 நபர்களுக்கும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டம் 50 நபர்களுக்கும் வழங்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் அரசின் நலத்திட்டங்களை பெற்று நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, பயிற்சி துணை ஆட்சியர் ஜெயின், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழுத் தலைவர் கருணாநிதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News