காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 425 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 425 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம். பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் வேண்டுகோள்

Update: 2021-12-10 13:45 GMT

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா மற்றும் உருமாறிய ஒமிக்ரான் கொரோனாவை தடுப்பதற்கான மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெற உள்ளது.

இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் நோய் கடந்த ஆண்டுகளில் மிகுந்த பாதிப்பை உண்டாக்கி உலகளவில் மக்கள் மத்தியில் மிகுந்த அச்சுறுத்தலையும். இறப்புகளையும் சந்திக்க நேர்ந்தது. அக்கொடிய கொரோனா வைரஸ் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு ஒமிக்ரான் கொரோனாவாக உருமாறியுள்ளது. இதன் பாதிப்பு இந்தியா உட்பட 57 நாடுகளில் பரவியுள்ளது. இதற்கு முந்தைய கொரோனாவை காட்டிலும் இந்த புதுவகையான உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது.

இதற்கு முந்தைய டெல்டா வகை கொரோனா கனிசமான உயிர் இழப்பை ஏற்படுத்தியது. அந்த வைரஸின் தாக்கம் இன்னும் இருந்து வருகிறது. இந்த கொடிய கொரோனா மற்றும் உருமாறிய ஒமிக்ரான் கொரோனாவை தடுப்பதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசியே என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும். தினந்தோறும் தடுப்பூசி முகாம்கள், அரசு சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் செலுத்தப்படுவது மட்டுமில்லாமல் அல்வப்போது மெகா தடுப்பூசி முகாம் மூலமாகவும் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி முகாம் முதல் மற்றும் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. முதல் தவணையில் 103 சதவீதத்திற்கு மேல் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் இரண்டாம் தவணையில் 56 சதவீதம் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால் மட்டுமே நோய் எதிர்ப்பு தண்மை உருவாகி கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும். இதுவரை இரண்டாம் தவணை தடுப்பூசி போடாதவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில்  இதுவரை 1,88,028 நபர்கள் உள்ளனர். இவர்களுக்கு தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி மூலமாக இரண்டாம் தவனை தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே நாளை 11.12.2021 சனிக்கிழமை அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 425 முகாம்களுக்கு சென்று முதல் மற்றும் குறிப்பாக நிலுவையில் உள்ள இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு நம்முடைய குடும்பத்தினரும் குழந்தைகளும் கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும்படி, மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டு காெள்கிறேன்.

Tags:    

Similar News