காஞ்சிபுரத்தில், சிறப்பு இருதய பரிசோதனை முகாம்: எம்.எல்.ஏ எழிலரசன் தலைமையில் ஏற்பாடு..!

காஞ்சிபுரத்தில், சி.வி.எம் அண்ணாமலை அறக்கட்டளை, பிராண்டியர் லைப் மருத்துவமனை, கே.எம் செரியன் இருதய அறக்கட்டளை ஆகியவை இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தியது.

Update: 2022-06-26 14:15 GMT

காஞ்சிபுரத்தில், இலவச இருதய பரிசோதனை முகாமை பார்வையிட்ட எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன் மற்றும் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்ட பிரமுகர்கள்.

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமை உத்தரமேரூர் எம்.எல்.ஏ. சுந்தர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் நித்யா சுகுமார்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,வாலாஜாபாத் ஒன்றியக்குழுவின் தலைவர் தேவேந்திரன்,தி.மு.க நகர் செயலர் சன்பிராண்ட் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காஞ்சிபுரம்எம்.எல்.ஏ.சி.வி.எம்.பி.எழிலரசன் வரவேற்று பேசினார். காஞ்சிபுரம் சி.வி.எம்.அண்ணாமலை அறக்கட்டளை,பிராண்டியர் லைப்லைன் மருத்துவமனை,மருத்துவர் கே.எம்.செரியன் அறக்கட்டளை, காஞ்சிபுரம் லைப் கேர் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளின் மருத்துவக்குழுவினர் ஒன்றாக இணைந்து இலவச இருதய பரிசோதனைகளும்,மருத்துவ ஆலோசனைகளும் வழங்கினர்.

இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை, இருதய படச்சுருள் எடுத்தல், செவித்திறன் பரிசோதனை , இருதய பிரச்னை உட்பட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது. மாநகர் மன்ற மண்டலத் தலைவர்கள் எஸ்.சந்துரு,கே.மோகன் உட்பட உறுப்பினர்கள், தி.மு.க பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.எழிலரசன் செய்திருந்தார். ஒரு நாள் மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இம்மருத்துவ பரிசோதனை செய்ய குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 7000 செலவாகும் நிலையில் அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News