இளம் தலைமுறை மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் எஸ்.பி சுதாகர்

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மருத்துவர் எம்.சுதாகர் பணியாற்றி வருகிறார்.

Update: 2023-03-27 15:45 GMT

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தனியார் பள்ளி விளையாட்டு விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட எஸ்.பி.சுதாகர் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்.

காவல்துறை பணிகளைத் தாண்டி, வளரும் தலைமுறை மாணவர்களை ஊக்குவிக்கும் காஞ்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் செயல் வரவேற்பு பெற்றுள்ளது.

காவல்துறை என்றாலே கம்பீரம், குற்றவாளியை நடுங்க வைக்கும் உடலமைப்பு , அதட்டலான பேச்சு என காவல்துறையினரை சித்தரிக்கும் காட்சி துறை.ஆனால் இதெல்லாம் தற்போது இல்லை என கூறும் அளவிற்கு தற்போதைய காவல் துறை உயர் அலுவலர்கள் மருத்துவர்களாகவும் , நடன கலைஞர்கள் ஆகவும் , பல் திறன் கொண்ட நபர்களாக பலரும்  உள்ளனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் எம்.சுதாகர் எந்த ஒரு சவாலான செயல்களையும், யாரும் அச்சறுத்தும் விதமாக இல்லாமல் எதிர்கொள்ள வேண்டுமென காவல்துறைக்கு அறிவுறுத்தி வருகிறார்.

கடந்த இரண்டு,மூன்று ஆண்டுகளாக ஒரே காவல் நிலையத்தில் பணி புரிந்து வரும் காவல்துறையினரின் மன உளைச்சலில் உள்ளனர் என்பதை மருத்துவர் என்ற முறையில் அறிந்து, தொடர்ந்து ஆறு மணி நேரம் ஒவ்வொரு காவலரையும் அழைத்து விருப்ப பணி மாற்றம் செய்தது காவலர்களை நெகிழச் செய்தது.

இது மட்டும் இல்லாமல் காஞ்சிபுரம் நகரை சுற்றியுள்ள தனியார் பள்ளிகளில் நடைபெறும் விழாக்களின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைக்கும் பட்சத்தில் எந்த அழைப்பையும் அவர் நிராகரிப்பதில்லை.இதனைப் பெரும் வாய்ப்பாக பயன்படுத்தி, பள்ளி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஆரோக்கியமான உணவு முறையை தெரிவிப்பதும் , நகரின் வரலாற்று உண்மைகளை அவர்களுக்கு எளிதாக சென்றடையும் வகையில் கூறுவது என அனைத்தும் விழாவின் சிறப்பு அம்சங்களாக மாறிவிடுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் காஞ்சியில் உள்ள தனியார் பள்ளியின் விளையாட்டு தின விழாவில் வெற்றி பெற்ற மாணவ ,மாணவிகள் எஸ்.பியை சந்திக்க விருப்பம் தெரிவித்த நிலையில் அவர்களை தனது அலுவலகத்தில் அமர வைத்து அவர்களின் பன்முகத் திறன்களை கேட்டறிந்தார்.இதில் ஒரு மாணவன் , அவருடன் சரளமாக விஞ்ஞான பொருட்களின் செயல் திறன்களை எடுத்துக் கூறியது, அவரை அசர வைத்து அவனை தனது இருக்கையில் அமர வைத்து அவனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிகழ்வு வியப்பில் ஆழ்த்தியது.

மேலும் எதிரில் அமர்ந்து இருந்த மாணவ, மாணவியர்களை உங்கள் இடத்தில் இருந்து, இந்த இடத்திற்கு உயர அனைவரும் முயற்சிக்க வேண்டும் எனவும் , இது ஆளுமை திறமை கொண்ட இருக்கை எனவும், ஆட்சியர் , எஸ்.பி உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு வருவதற்கு முயலுங்கள் என கூறி அவர்களுடன் குழு படம் எடுத்துக் கொண்டு, அவர்களை மகிழ்வித்த நிகழ்வை இன்றளவும் மாணவர்கள் தனது பெற்றோர் நண்பர்கள் உறவினர்களிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து  கொள்வதுடன்  அவருக்கு வாழ்த்து செய்திகளையும் அனுப்பி வருகின்றனர்.

இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.காவல்துறை அதிகாரிகள் என்றாலே குற்றவாளிகளின் கடுமையாக நடந்து கொள்ளும் மனோபக்குவம் உடையவர்கள் என்ற பிம்பத்தை உடைத்தெறிந்த இவருடைய செயல் மாணவ, மாணவிகள் பெற்றோர், சமூக ஆர்வலர்களின் கவனம் பெற்றுள்ளது என கூறலாம்.

Tags:    

Similar News