சாம்சங் தொழிலாளர்கள் செப்.16ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி

ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி ஐந்தாவது நாளாக சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-09-13 12:00 GMT

ஐந்தாம் நாள் நிகழ்வில் சி ஐ டி யு மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன் பேசினார்.

ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  சாம்சங் தொழிலாளர்கள் ஐந்தாவது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது சாம்சங் இந்தியா நிறுவனம். இங்கு வாஷிங் மெஷின், டிவி ,பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இத் தொழிற்சாலையில் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவோம் நிலையில், இந்த ஆண்டிற்கான ஊதிய உயர்வு மற்றும் சிஐடியு தொழிற்சங்கம் துவங்க அங்கீகாரம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இரண்டாம் நாள் போராட்டத்திற்கு பிறகு ஸ்ரீபெரும்புதூரில் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள தொழிலாளர் நலத்துறை சமரச இணை ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று அது தோல்வியில் முடிந்தது.

இருப்பினும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று மாலை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் , ஊழியர்கள் பிரநிநிகள் , சிஐடியு சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சாலை சார்ந்த அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சு வார்த்தையில் எந்த ஒரு சுமூகமான நிலை எட்டப்படாத நிலையில் இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும், போராட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்ததை மறுத்து இன்று ஐந்தாவது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிகழ்வில்  சிஐடியு சங்க மாநில தலைவரும் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சௌந்தர்ராஜன் , மாநில செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் போராட்ட கூட்டத்தில் உரையாற்றி வருகின்றனர்.

இன்று நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் வரும் 16ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடைபெறும் எனவும் அதனைத் தொடர்ந்து வரும் 18ஆம் தேதி சென்னையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும், மேலும் தொழிற்சங்க பதிவு குறித்து நீதிமன்றத்தையும் நாட உள்ளதாக சிஐடியு மாநில தலைவர் சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

சாம்சங் தொழிலாளர்களின் ஐந்தாம் நாள் போராட்டம் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பின் செய்தியாளர்களை சந்தித்தபோது ,கடந்த இரண்டு நாட்களாக நடைபெறும் பேச்சுவார்த்தை இன்றும் நடைபெறும் நிலையில் அதில் சுமுக முடிவு எட்டப்படாவிட்டால் வரும் 16ஆம் தேதி மாவட்ட ஆட்சியரை இப்பிரச்சனையில் தலையிடக் கோரி பேரணி காஞ்சிபுரத்தில் நடைபெறும் எனவும் அதனை தொடர்ந்து 18 ஆம் தேதி தமிழ்நாடு தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து சென்னையில் இத்தொழிலாளர்களுக்காக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

தொழிற்சங்க பதிவிற்கு 45 நாட்கள் காலக்கெடு இருக்கும் நிலையில் 75 நாட்கள் ஆகியும் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்துவதை கண்டித்து நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News