காஞ்சிபுரம் அண்ணா நினைவகத்தில் சிலைக்கு மாலை அணிவித்த விகே சசிகலா

காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு வி.கே.சசிகலா மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

Update: 2024-09-15 13:00 GMT

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த வி கே சசிகலா.

வாக்களித்த மக்களை கவலைப்பட வைத்துள்ளது திமுக அரசு எனவும், கடந்த நான்கு வருடங்களில் மத்திய அரசுடன் சண்டையிட்டுக் கொண்டே கழித்து விட்டதாகவும் காஞ்சிபுரத்தில் சசிகலா குற்றச்சாட்டி உள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுக நிறுவனருமான மறைந்த  அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

அவ்வகையில் பேரறிஞர் அண்ணாவின் காஞ்சிபுரத்தில் உள்ள நினைவு இல்லத்தில் காலை முதலே பல்வேறு கட்சியினர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி கே.சசிகலா இன்று அண்ணா நினைவு இல்லத்திற்கு வந்து அவரது திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


அதனைத் தொடர்ந்து நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது , அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் நேரத்தில் பொதுமக்களை சந்தித்து அவர்களின் ஆதரவு பெற்று ஆட்சி அமைத்து வருகிறோம். அந்த மக்களை நினைக்க வேண்டும் எனவும், மெட்ரோ ரயில் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

சிறிய தூரத்தை கடக்க கூட பல வீதிகளை சுற்றித்தான் செல்ல வேண்டிய நிலை தற்போது சென்னையில் உள்ளது.மக்களுக்கான ஆட்சி அம்மாவின் காலத்தில் தான் இருந்தது என்றார்.

திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அழைப்பு வந்தால் கலந்து கொள்வீர்களா என கேட்டபோது திருமாவளவன்  எனது சகோதரர் எனவும் அழைத்தால் கண்டிப்பாக கலந்து கொள்வேன் எனவும் தெரிவித்தார்.

மாநில அரசு மக்களை நினைத்து செயல்பட வேண்டுமே தவிர, அவர்களை மேலும் மேலும் துன்புறுத்தக் கூடாது எனவும், அரசு செய்ய வேண்டியதை சரியாக செய்ய தவறி விட்டது. தற்போது மத்திய அரசுடன் சண்டை போட்டுக்கொண்டு கடந்த நான்கு வருடத்தை வீணடித்துள்ளதாகவும் மீதம் உள்ள ஒரு வருஷத்தில் என்ன செய்து முடிக்க முடியும்.

இது சிலருக்கு புரியும் எனவும் , சிலருக்கு புரிந்தும் புரியாமலும் இருக்கும் எனவும் தெரிவித்தார். நிச்சயமாக இதற்கு விரைவில் பதில் கூற வேண்டிய காலம் வரும். ரொம்ப காலம் ஏமாற்ற முடியாது.மலையாள மக்களுக்கு எனது ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர் பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News