ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குச் சாவடிஅலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் ஆட்சியர் மா. ஆர்த்தி ஆலோசனை வழங்கினார்

Update: 2021-09-24 08:15 GMT

காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலருக்கான பயற்சி வகுப்பை பார்வையிட்ட ஆட்சியர் மா. ஆர்த்தி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

வாக்குச்சாவடியில் பணியாற்ற உள்ள மொத்தம் 5053 தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் கீழம்பி திருமலை பாலிடெக்னிக் கல்லூரி, வாலாஜாபாத் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளி, உத்திரமேரூர் மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, ஸ்ரீபெருமந்தூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, குன்றத்தூர் அல்வின் இன்டர்நேஷனல் பள்ளி ஆகிய 5 மையங்களில் நடைபெற்று வருகிறது.

இன்று காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழம்பியில் உள்ள திருமலை பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வரும் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி நேரில் பார்வையிட்டார்.தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சியினை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தேர்தல் பணிகளை சிறப்பாக ஆற்றிடுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

இவ்ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனுவாசன் ,  வெங்கடேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News