ஊரக உள்ளாட்சி தேர்தல் : ரூ. 2.5 லட்சம் மற்றும் குங்குமச்சிமிழ் பறிமுதல்

மாவட்டத்தில் இதுவரை ரூ. 2.5 லட்சம் பணம் , ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஜரிகை டவல், குங்கமச்சிமிழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

Update: 2021-09-21 06:45 GMT

காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சித்தேர்தலை முன்னிட்டு பறக்கும்படையினரால்  பறிமுதல் செய்யப்பட்ட குங்குமச்சிமிழ்

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 என இரு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து ஒன்றிய அலுவலகங்களில் இதற்கான வேட்பு மனு கடந்த 15ஆம் தேதி துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது.ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க பொருட்கள் மற்றும் பணம் கொடுத்தல் ஆகியவற்றை தடுக்கும் வகையில், சுழற்சி முறையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் காஞ்சிபுரம் ஒன்றிய எல்லையான பூஞ்சை  வாகன சோதனையில்,  கணக்கில் இல்லாமல் எடுத்து வந்த  ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 80 ரூபாயும் மற்றொரு பகுதியில் ஒரு லட்ச ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.



இதேபோல், பொன்னேரி கரைப் பகுதியில் அனுமதியின்றி காரில் எடுத்து வரப்பட்ட 300 ஜரிகை டவல் மற்றும் இந்திரா நகர் பகுதியில் காரில் எடுத்து வரப்பட்ட சிறிய குத்துவிளக்கு,

குங்கமசிமிழ் உள்ளிட்ட 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News