வீட்டுமனை இருப்பதாக ரூ.1.68 லட்சம் மோசடி: பணத்தை மீட்டு தர கோரிக்கை

காஞ்சிபுரம் சி எஸ் எம் தெருவில் வீட்டுமனை இருப்பதாக கூறி ஐந்து நபர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி வருவதாக கோதண்டபாணி என்பவர் மீது புகார் எழுந்துள்ளது.

Update: 2024-09-30 12:15 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த பொதுமக்கள்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக தெரிவித்தனர். 

அவ்வகையில் காஞ்சிபுரம் மாதாளம்பாளையம் தெருவை சேர்ந்த சுரேஷ்,  ரத்னா,  கருணாகரன் மற்றும் தேவிகா, பிரகாசம் ஆகிய ஐந்து நபர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை குழுவாக அளித்தனர்.

அம் மனுவில், நாங்கள் மாதனம்பாளையத்தெருவில் வசித்து வருவதாகவும் சிஎஸ்எம் தெருவை சேர்ந்த நாகப்ப முதலியார் மகன் கோதண்டபாணி என்பவர் தனக்கு சொந்தமாக ஆண்டு அனுபவித்து வரும் இடத்தை விற்பனை செய்வதாக கூறி எங்கள் ஐந்து பேரிடமிருந்து ரூபாய் ஒரு லட்சத்து 68 ஆயிரத்தை கடந்த 2012 ஆம் ஆண்டு அதிக பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் முன்னிலையில் பெற்றுக்கொண்டார்.

மேலும் அவர் விற்பனை செய்வதாக கூறப்பட்ட இடத்தில் அதுபோன்று வீட்டுமனை பிரிவுகள் ஏதுமில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து பலமுறை கேட்டபோது விரைவில் பணத்தை திருப்பி தருவதாக கூறிவந்த நிலையில், கோதண்டபாணி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக் கறைவால் இறந்து போனார்.

இந்நிலையில் அவரது பிள்ளைகள் ரமேஷ் சொக்கநாதன், ஜெயராஜ் மற்றும் இருமகள் ஆகியோரிடம் இது குறித்து பலமுறை கேட்டபோதெல்லாம் அதனை தவிர்க்கும் விதத்தில் பதில் கூறி செத்துப்போன என்னுடைய அப்பாவிடம் போய் கேட்டுக்கள்ளுங்கள் என்றும் தெரிவித்து மிரட்டல் விடுத்தனர். 

இதுகுறித்து சிவகாஞ்சி காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 90 நாட்களுக்குள்  பணம் திருப்பி செலுத்தி விடுவதாக உறுதியளித்தனர். 

ஆனால் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் மீண்டும் அவரிடம் இருந்து எந்த ஒரு கால நிபந்தனையும் அளிக்காமல் பணத்தை மீட்டு தர காவல்துறை உதவி செய்ய வேண்டும் எனவும், இதுகுறித்து ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

Similar News