தமிழகத்தில் இஸ்லாமியர்களின் உள் ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த கோரிக்கை

காஞ்சிபுரத்தில் நடந்த தவ்ஹீத் ஜமாஅத் சமுதாய விழிப்புணர்வு தெருமுனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2024-09-30 10:45 GMT

காஞ்சிபுரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சமுதாய விழிப்புணர்வு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் இஸ்லாமியர்களின் உள் ஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு காஞ்சிபுரத்தில் நடந்த தவ்ஹீத் ஜமாஅத் சமுதாய விழிப்புணர்வு தெருமுனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அழகிய முன்மாதிரி இப்ராஹீம் நபி என்ற 10 மாத கால செயல் திட்டத்தை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் கிளை சார்பாக ஒலிமுஹம்மதுபேட்டை தோப்புத் தெருவில் மாபெரும் சமுதாய விழிப்புணர்வு தெருமுனைக் கூட்டம் கிளை தலைவர் சாகுல் ஹமீத் தலைமையில் நடைப்பெற்றது.


இதில் காஞ்சி மாவட்ட துணை தலைவர் அசார் மற்றும் மாநில பேச்சாளர் ஹஃபிஸ் சமுக தீமைகளும் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகளும்* என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :

தமிழகத்தில் இஸ்லாமியர்களின் உள் ஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்த வேண்டும்.

வஃக்ப் வாரிய சட்டத்தில் 44 திருத்தங்களை கொண்டு வர முயற்சிக்கும் பாஜக அரசை கண்டிக்கிறோம்.

புகை மற்றும் போதை பொருட்களை ஒழிக்க வேண்டும், மேலும் காஞ்சிபுரம் ஒலிமுஹம்மதுபேட்டையில் தெருநாய் தொல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும்.குப்பைகளை சரியான முறையில் அகற்ற வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட துணை செயலாளர் அன்சாரி, கிளை செயலாளர் யூசூஃப், பொருளாளர் பாசில் மற்றும் TNTJ நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News