பட்டா வழங்கியும் நில அளவீடு செய்யாததால் தீக்குளிக்க முயன்ற பெண்.

இலவச வீட்டு மனை பட்டா வழங்கி பல ஆண்டுகளாக நில அளவீடு செய்யாததால் மனம் உடைந்த பெண் தீக்குளிக்க முயன்றார்.

Update: 2024-09-30 09:45 GMT

வீட்டு மனை பட்டாவிற்கு நில அளவீடு செய்யாததை கண்டித்து பெட்ரோல் கேனுடன் வந்த பெண்ணிடம் இருந்து பறிமுதல் செய்யும் அதிகாரி மற்றும் காவல் துறையினர் 

பட்டா வழங்கி பல வருடங்கள் ஆகியும் இலவச வீடு திட்டத்தின் கீழ் பயனளிக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி பெண் ஒருவர் பெட்ரோல் கேனுடன் மாவட்ட குறை தீர் கூட்ட அரங்கம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் வட்டத்திற்கு உட்பட்டது காவித்தண்டலம் கிராமம்.

இங்கு காமாட்சி என்பவர் மூங்கில் கூடைகள் செய்து பல ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே அப்பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா திட்டத்தின் கீழ் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அது முறையாக நில அளவீடு செய்யப்படாமல் வீடு கட்ட இயலாமல் வழக்கம்போல் மரத்தடி மற்றும் பள்ளிகளின் நிழலில் தங்கி வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் முறையாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.


இந்நிலையில் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மீண்டும் காமாட்சி பெட்ரோல் கேனுடன் இன்று குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

உடனடியாக அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து அவருடன் சமரச பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பெட்ரோல் கேனையை கொடுத்துவிட்டு மீண்டும் வீடு திரும்பினார்.

பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையாக  சமாதானம் மட்டுமே நடைபெறுகிறது எனக்கு குற்றம் சாட்டினர். இதனால் இப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News