ரூ.155 கோடியில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா

5.12 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள மருத்துவமனைக்கானக்கு தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புதுறை அமைச்சர் பூபேந்திர யாதவ் அடிக்கல் நாட்டினார்.

Update: 2022-05-22 10:30 GMT

புதியதாக அமைய உள்ள தொழிலாளர் நல காப்பீட்டுக் கழக மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய அமைச்சர்கள் ஸ்ரீ பூபேந்தர் யாதவ் ,ராமேஸ்வர் தெலி பங்கேற்றனர்.

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் கீழ் , காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள வல்லம் -வடகால் சிப்காட் வளாகத்தில் 5.12 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ. 155 கோடி செலவில் 100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனையில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் புதிய மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டினார்.

இவ்வளாகத்தில் அமைய உள்ள மருத்துவமனையில் பூந்தமல்லி, திருமுடிவாக்கம், ஓரகடம், படப்பை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் சுகாதார வசதிகளை எளிதாக பெற முடியும்.

இங்கு புறநோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, மருந்தகம், அறுவை சிகிச்சை அரங்கம் , குழந்தைகள் நல மருத்துவம், எலும்பு சிகிச்சை, மகளிர் சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், கதிரியக்க பிரிவு , அல்ட்ரா சவுண்ட் மற்றும் ஆய்வுக் கூடங்கள் அமைய உள்ளது.

இதன் மூலம் 8 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் சிறப்பான மருத்துவ வசதியை பெற இயலும். இதில் பேசிய மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் , தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் சார்பில் 160 இஎஸ்ஐ மருத்துவ மனைகள் 8 மருத்துவக் கல்லூரிகள் 2 பல் மருத்துவக் கல்லூரிகள் இரண்டு செவிலியர் கல்லூரிகள் மற்றும் 600க்கும் மேற்பட்ட கிளை அலுவலகம் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் செயல்படுகிறது

மாதம் இருபத்தியொரு ஆயிரம் வரை சம்பளம் பெறும் அனைத்து தொழிலாளர்களும் தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள் தற்போது இந்தியா முழுவதும் 640 மாவட்டங்களில் 566 மாவட்டங்களுக்கு தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது

தமிழகத்தைப் பொறுத்தவரை சுமார் 38 லட்சத்து 26 ஆயிரத்து 600 கோடி  காப்பீட்டாளர்கள் மற்றும் ஒரு கோடியே 48 லட்சத்து , 47  ஆயிரத்து 210 பயனாளிகள் இ.எஸ்.ஐ.  திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்படள்ளது என்றார். 

இந்நிகழ்ச்சியில் இணை அமைச்சர் ஸ்ரீ ராமேஸ்வர் தெலி , தமிழக தொழிலாளர் நலத்துறை முதன்மை செயலாளர் கிர்லோஸ் குமார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News