அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் பதிவு கவுன்டர்கள் அமைக்க கோரிக்கை

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற பதிவு சீட்டிற்காக பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2022-09-20 14:30 GMT

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி சீட்டு பெற அதிகளவில் காத்திருக்கும் நோயாளிகள்.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புற மற்றும் உள் நோயாளிகள் பிரிவுகளில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவது வழக்கம்.

இந்நிலையில் வழக்குத்திற்கு மாறாகவே தொடர்ந்து அண்மை நாட்களாகவே காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அதிக அளவு நோயாளிகள் தலைவலி, காய்ச்சல் போன்ற நோய்களுக்கும், பிற உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் அதிகளவில் தற்போது மருத்துவமனைக்கு வருகின்றனர்.

இதற்காக சிகிச்சை பெறக்கூடியவர்கள் மருத்துவமனை வளாகத்தில் புறநோயாளிகள் பதிவு சீட்டினை பெற்றே சிகிச்சை பெற வேண்டும். அதேபோல் மிகவும் முடியாதவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்காக உள்நோயாளிகள் பதிவு சீட்டினை பெற்றே சிகிச்சை பெற்றாக வேண்டும்.

இந்த நிலையில் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை பெறுவதற்காக ஏராளமான நோயாளிகள் இன்று காலை முதலே வருகை தந்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் வளாகத்தில் அமைந்துள்ள கவுன்டரில் உள் மற்றும் புறநோயாளிகள் பதிவு சீட்டு பெறுவதற்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


இது குறித்து நோயாளிகள் கூறுகையில்,  இந்த பதிவு சீட்டுக்களை பெற ஒருமணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் ஆவதாகவும் அது வரை நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு சிகிச்சை பெற வரும் நோயாளிகளான தாங்கள் வரிசையில் நீண்ட நேரம் நின்று காத்திருக்கும்  நிலை ஏற்படுவதாகவும் கூறினர்

மேலும் மதியம் ஒரு மணி வரை மட்டுமே நோய்களுக்கு சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் பார்க்ககூடிய நிலையில், சிலர் மறுநாள் கூட மருத்துவரை பார்க்கும் நிலை ஏற்படுவதாகவும் வேதனை தெரிவித்து மருத்துவமனையின் நிர்வாகத்தின் அலட்சியமே இத்தகைய நிலைக்கு காரணம் எனவும் மருத்துவமனை நிர்வாகத்தினை சாடி வருகின்றனர்.

இது குறித்து உடனடி நடவடிக்கை எடுத்து நோயாளிகளின் சிரமத்தினை உணர்ந்து கூடுதல் புறநோயாளி சீட்டு கவுன்டர்களை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News