காஞ்சிபுரத்தில் அதிகரிக்கும் போக்சோ, சிறுமிகளை கண்காணிக்க பெற்றோர்கள் தவறுகிறார்களா

காஞ்சிபுரத்தில் போக்சோ சட்டத்தில் கைது அதிகரித்துள்ளது, பெற்றோர்களின் கண்காணிப்பில் சிறுமிகள் இல்லையா என்கிற அச்சம் எழுகிறது.

Update: 2021-07-16 14:30 GMT

பைல் படம்

தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பள்ளி , கல்லூரிகள் மூடல் , தொழிற்சாலை பணிகுறைப்பால் வேலையின்மை என பல கூறலாம்..

இந்நிலையில் கல்வி பயில மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு. படிப்பு நேரம் தவிர செல்போன் விளையாட்டு மாணவர்களின் மன உளைச்சல் அதிகரித்தது என்பதை யாரும் மறுக்க முடியாது..

மேலும் இதனால் பெற்றோர்கள் குழந்தைகளிடையே இடைவெளி பெரியளவில் உருவாகியது. இதனால் இழப்பு பெற்றோர்கள் தான் என்பது இறுதி இழப்பிற்கு பிறகு உணரும் நிலையில உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக போக்சோ சட்டத்தில் கைது எனும் நிகழ்வு அதிகரித்துள்ளது. வாலிபர்கள் சிறுமியை முறையின்றி அழைத்துச் செல்லும் நிகழ்வு அதிகரித்துள்ளது.

குறிப்பாக சிறுமிகளை கண்காணிக்க பெற்றோர்கள் தவறுவதால் 15 வயதிலிருந்து 17 வயது வரையிலான பெண் குழந்தைகள் தடம் மாறிச் செல்வது தற்போது அதிகரித்துள்ளது.

இம்மாதத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் போஸ்கோ சட்டத்தின்கீழ்  5 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்செயல் பெரும் வருத்தத்தை அளிப்பதாகவும் சமூக நலத்துறை குறிப்பாக பெண்கள் , குழந்தைகளுக்கா சிறப்பு உதவி எண்கள் அறிவித்தும் அதை முறையான விளம்பரம் செய்யாததுதான் காரணம் என்று  கூறப்படுகிறது.

இனியாவது அரசுத்துறைகள் அதிகளவில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி குழந்தைகளை கண்காணிக்கும் நிலை உருவாகி  போக்சோ சட்டத்தில் கைது குறைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News