அதிமுக ஐடி பிரிவு நிர்வாகிக்கு காவல்துறை எச்சரிக்கை

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக ஐ.டி பிரிவு நிர்வாகியான சதீஷ் பிறந்தநாள் விழாவில் கத்தியுடன் நின்றிருந்த போட்டோ வைரலானதை தொடர்ந்து தாலுகா காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.

Update: 2023-01-24 14:00 GMT

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக தொழில்நுட்ப அணி நிர்வாகி சதீஷ்..

தமிழகத்தில் தற்போது  தங்களுடைய பிறந்தநாள் , திருமண நாள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் பங்குபெறும் தலைவர்களுக்கு மாலை அணிவிப்பது உள்ளிட்ட படங்களை முகநூல் இணையதளங்களில் வெளியிட்டு லைக் வாங்குவதை தற்போதைய இளைய தலைமுறையினர் அதிக அளவில் மேற்கொண்டு வருகின்றனர்.

இது மட்டுமல்லாமல் குற்றவாளிகள் கூட தங்கள் பிறந்தநாளை தங்களுடைய ஆதரவாளருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி வரும் நிலையில் கேக் வெட்டுவதற்கு கத்தியை பயன்படுத்தி வருவதும் அதை புகைப்படமாக எடுத்து பல்வேறு சினிமா திரைப்பட பாடல்களுடன் இணைத்து வெளியிட்டு ஆதரவு தேடியும் எச்சரிக்கையாகவும் பலருக்கு தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற விஷயங்கள் பல்வேறு நிலைகளில் பொது இணையதளங்களில் வைரலாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

அரசியல் தலைவர்களை பற்றி தங்கள் கருத்துக்களை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் வீடியோவாக பேசி யூடியூப்பில் வெளியீட்டு அது இரு தரப்பினர்களையும் கடும் சொற்களால் வாக்குவாதமாக மாறி ஒருவரையும் ஒருவர் குற்றம் சொல்லி காவல்துறையில் புகார் தெரிவிப்பதும் அதில் அடிப்படையில் உதவியுடன் காவல் துறையினர் அவர்களை தொழில்நுட்ப குற்று நடைமுறை சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் குறித்து அவதூறு பேசியதாக பிஜேபியின் பிரமுகர் ஜெகதீசன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தகவல் தொழில்நுட்பங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தவறான புகைப்படங்களை பதிவிட கூடாது என காவல்துறை சைபர் க்ரைம் எச்சரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவை சேர்ந்த தொழில்நுட்ப பிரிவு அணி நிர்வாகி சதீஷ் , அவருடைய பிறந்தநாளில் அவரது நண்பர்கள் அவருக்கு ஆளுயர ரோஜா மாலை அணிவித்து, அவர் கையில் கத்தி ஒன்று வைத்திருந்தது போல் குழு புகைப்படம் இணையதளத்தில் பதிவிடப்பட்டு அது அதிமுக குழுவில் வைரலாகி இருந்தது.

இப் புகைப்படம் குறித்து காவல்துறை அறிந்து காஞ்சி தாலுகா காவல் ஆய்வாளர் , அதிமுக நிர்வாகி சதீஷை அழைத்து இது போன்ற புகைப்படங்கள் வெளியிடக் கூடாது என எச்சரித்தும் புகைப்படத்தில் வைத்திருந்த கத்தி குறித்து விசாரணை மேற்கொண்டார்.

அப்போது அந்தக் கத்தி சுவற்றில் அழகுக்காக மாற்றப்படும் மரத்திலான அட்டை கத்தியென கூறப்பட்டு , அதை காவல்துறையிடம் காட்டியதன் பின் அவருக்கு எச்சரிக்கை விடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News