காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை துவக்கிய பா.ம.க. வேட்பாளர் ஜோதி வெங்கடேசன்

பாஜக - பாமக கூட்டணி சார்பாக காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாமக கட்சி வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் பிரச்சாரத்தை துவக்கினார்.

Update: 2024-03-24 13:31 GMT

இந்து மக்கள் கட்சி நிர்வாகிக்கு வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக - பாமக கூட்டணி வேட்பாளர் ஜோதிவெங்கடேசன் பல்வேறு கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்று பிரசாரத்தை உத்திரமேரூரில் துவக்கினார்.

18 ஆவது மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறுகிறது.

அவ்வகையில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேட்பு மனு தாக்கல் துவங்கியது.


இந்நிலையில் கூட்டணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கூட்டணியில் உள்ள நிலையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் ஜோதி வெங்கடேசன் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்.

இவர் இன்று உத்திரமேரூர் காஞ்சிபுரம் வாலாஜாபாத் பகுதியில் உள்ள பாமக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்று அவர்களுக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து உத்திரமேரூர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து உத்திரமேரூர் தனது தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கினார்.

இந்நிகழ்வில் பாமக நிர்வாகிகள் திருக்கச்சூர் ஆறுமுகம் , பொன் கங்காதரன், மாவட்ட செயலாளர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றி பெறுவோம் என கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

பாஜக மாவட்ட செயலாளர் பாபு , ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பாக ஆர்.வி. ரஞ்சித் குமார், அமமுக சார்பில் வேளியூர் தனசேகரன், இந்து மக்கள் கட்சி மாநில துணை செயலாளர் முத்து உள்ளிட்ட ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News