காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

காஞ்சிபுரத்தில் மீண்டும் விலை உயர்வால் பெட்ராேல் ரூ106.15 காசுகள், டீசல் ரூ102.29 காசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Update: 2021-10-29 04:00 GMT

தமிழகத்தில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர். குறிப்பாக தினக்கூலி வேலை செய்யும் போது தங்களது பணிக்கு செல்ல இரு சக்கர வாகனத்தை அதிகம் பயன்படுத்தும் நிலையில் கடந்த  ஒரு வாரமாக நாள்தோறும் 30 காசுகள் விலை ஏற்றத்தினை கண்டுவருகிறது.

இதேபோல் டீசல் விலையிலும் நாள்தோறும் விலையேற்றம் கண்டு வருவதால்  சரக்கு வாகனங்களின் பயணக்கட்டணம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

காஞ்சிபுரத்தில் இன்று பெட்ரோல் விலை ரூபாய் 106.15 காசுகள் என விற்கப்படுகிறது. டீசல் விலை ரூபாய் 102.29 காசுக்கு விற்கப்படுகிறது.

Tags:    

Similar News