வாலாஜாபாத் : 4 கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

வாலாஜாபாத் வட்டம் , தென்னேரி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்பி செல்வம், எம்எல்ஏ சுந்தர் திறந்து வைத்தனர்.

Update: 2021-09-01 06:15 GMT

தென்னேரியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கிவைத்த காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜி செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர்.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சொர்ணவாரி பருவத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் பயிரிடப்பட்டது.

கடந்த ஒரு மாத காலமாக பல விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் விளைவித்த நெல்லை அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது வரை 30 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது ‌‌

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்னேரி குரு வட்டதில் தென்னேரிஅகரம் , மஞ்சமேடு திருவெங்கரணை மற்றும் கட்டவாக்கம் ஆகிய கிராம பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் அறுவடை காத்துக் கொண்டிருக்கும் நிலையில்

தென்னேரி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்  க.சுந்தர் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்து துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் கிராம விவசாயிகள் நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News