காஞ்சிபுரத்தில் நியுமோகோக்கல் தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம் .

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புட்குழி அரசு சமுதாய சுகாதார நிலையத்தில், நியுமோகோக்கல் தடுப்பூசி செலுத்தும் முகாம் துவங்கியது

Update: 2021-07-23 06:00 GMT

திருப்புட்குழி அரசு சமுதாய சுகாதார நிலையத்தில், நியுமோகோக்கல் தடுப்பூசி செலுத்தும் முகாம் துவங்கியது

குழந்தைகளை அதிகம் பாதிப்படைய செய்யும் நியுமோகோக்கல் நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக ஒன்றரை மாதம், மூன்றரை மாதம் மற்றும் ஊக்கத் தவணையாக 9 மாத குழந்தைகளுக்கு அளிக்கப்படவுள்ள நியுமோகோக்கல் தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த வாரம் தமிழகம் முழுவதும் துவக்கப்பட்டது.

இன்று இத்திட்டத்தினை இன்று காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புட்குழி அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்  முன்னிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஆர்த்தி துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து தகுதியுடைய  குழந்தைகளுக்கும் இத்தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதனை தனியார் மருத்துவமனையில் செலுத்தி கொண்டால் ரூ12ஆயிரம் செலவழிக்க வேண்டும்.

இந்நிகழ்ச்சியில்  துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.பழனி, வட்டார மருத்துவ அலுவலர் மரு. (திருமதி).அருள்மொழி, மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News