தேசிய கைத்தறி தினம் : காஞ்சியை சேர்ந்த 9 நெசவாளர்களுக்கு விருது

கைத்தறி நெசவாளர்களை நினைவுகூறும் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்ட ஆகஸ்ட் 7 ஆம் நாள் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது .

Update: 2022-08-06 14:30 GMT

எட்டாவது தேசிய கைத்தறி தின விழாவில் விருது பெற உள்ள காஞ்சிபுரம் நெசவாளர்கள் , இயக்குனர் சசிகலாவை நெசவாளர் சேவை மையத்தில் சந்தித்தனர்

நெசவாளர்களை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய நெசவாளர் தினமாக கடைபிடிக்கப் படுகிறது. தேசிய இயக்கம் தொடங்கப்பட்ட நாளான ஆகஸ்ட் 7ஆம் தேதி இதற்காக தேர்வு செய்யப்பட்டது.

நாளை எட்டாவது தேசிய நெசவாளர் தின விழா கொண்டாடப்படுவதால் நெசவாளர்களை போற்றும் வகையில் புதிய வடிவமைப்பு மற்றும் பாரம்பரியம் உள்ளிட்டவைகளை கணக்கில் கொண்டு சிறந்த நெசவாளர்களை நாடு முழுவதும் கைத்தறித்துறை அமைச்சகம் தேர்வு செய்யும்.

அவ்வகையில்  உயரிய விருதான சன்த் கபீர் வீருது , தேசிய விருது மற்றும் பட்டய சான்றிதழ் ஆகியவை நெசவாளர்களுக்கு வழங்கப்படும். அவ்வகையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 9 நெசவாளர்கள் அதாவது தேசிய கைத்தறி தின விழாவில் விருது பெற உள்ளனர்.

விருது பெற உள்ளோர் : 

சன்ந் கபீர் விருது : 

சின்ன காஞ்சிபுரம் , மேட்டுபாளையத் தெருவை  சேர்ந்த  கிருஷ்ணமூர்த்தி.

தேசிய விருதுகள் பெறுபவர்கள் : 

1. ஜிஎஸ்எம் தெருவை சேர்ந்த ஆர்.கீதா

2. திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த கணபதி & சரளா தம்பதியினர்.

3. கனிகண்டீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்த க.ருக்மணி.

4. ராயகுட்டை பள்ளத் தெருவை சேர்ந்த ஆ.ஹரி.

5. திருவேற்கம்மன் தெருவை சேர்ந்த வெ.ஹரி காமாட்சி தம்பதியினர்.

பட்டய சான்றிதழ் பெறுபவர்கள் : 

1. திருக்காளிமேடு  பகுதியை சேர்ந்த கா. கோவிந்தராஜ்.

2. திருக்காளிமேடு பகுதியை சேர்ந்த ஜெ.சீனிவாசன்

3. சின்ன காஞ்சிபுரம் சேர்ந்த எம்.பி. செல்வகுமார்

மேலும் கைத்தறி தின நாளை ஒட்டி  நமது கைத்தறி.. நமது பெருமை.. எனும் முழக்கத்தை முன்னிறுத்தி  கடைபிடிக்கும் வகையில் அனைவரும்  கைத்தறி ஆடை வாங்கி  நெசவாளர்களை வளம் காண வைப்போம் என கைத்தறித்துறை சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது.மேலும் இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 17 நெசவாளர்கள் தேசிய விருதையும் எட்டு நெசவாளர்கள் பட்டையைச் சான்றிதழ்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News