கொலை , கொள்ளைகளே திமுக அரசின் சாதனைகளாக உள்ளது‌: ஓபிஎஸ்

திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு போனதற்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி படுகொலை உதாரணம்

Update: 2021-10-01 14:45 GMT

காஞ்சிரபும் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக அதிமுக சார்பில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் பேசுகிறார், அதிமுக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம், காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது நடைபெற்றது.

இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசியதாவது:  கடந்த அதிமுக ஆட்சியின்போது மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பயனடைந்து வந்த நிலையில், தற்போது அத்திட்டங்கள் ஒவ்வொன்றாக திமுக  அழித்து  வருகிறது.  அதிமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு நிலை நாட்டப்பட்டு அமைதிப் பூங்காவாக திகழ்ந்து.

இந் நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற  நான்கு மாதங்களில், பட்டபகலில் செயின் பறிப்பு , தாம்பரம் ரயில் நிலையத்தில் இளம்பெண் படுகொலை உள்ளிட்ட சம்பவங்களை  பார்க்கும் போது,  அதிமுக சிறந்த ஆட்சியை அளித்தது  என்று மக்கள எண்ணும்  நிலைக்கு  வந்துவிட்டனர்.  ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் முந்தைய சாதனைகளை கூறி வாக்குகள் சேர்த்து 100 சதவீத வெற்றியை காஞ்சிபுரம் மாவட்டம் பெற உழைக்க வேண்டும் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள்  திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், பெஞ்சமின், வாலாஜாபாத் கணேசன்  மற்றும்  மாவட்ட அதிமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News