வீடு தேடி சென்று ஒலிம்பிக் வெள்ளி வீரமங்கையை வாழ்த்திய எம்எல்ஏ எழிலரசன்

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வீராங்கனை துளசி மதி முருகேசனின் வீட்டுக்கு சென்று எழிலரசன் எம்எல்ஏ வாழ்த்தினார்.

Update: 2024-09-07 10:00 GMT

பாராலிம்பிக் போட்டியில் பேட்மிட்டன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை துளசி மதி முருகேசனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்திய எழிலரசன் எம்எல்ஏ.

பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று திரும்பிய காஞ்சி மங்கை துளசிமதி முருகேசனை அவரது வீட்டுக்கு சென்று நேரில் வாழ்த்திய எம்எல்ஏ எழிலரசன் செயல் வரவேற்பை பெற்றுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 10 தினங்களாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது/ .இதில் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் வீரர்களை பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள செய்தனர்.

இந்த பாராலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பான இடங்களை பிடித்து வந்த நிலையில், பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவை சேர்ந்த குறிப்பாக நமது தமிழ்நாட்டின்  காஞ்சிபுரத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன் பல்வேறு நாட்டு வீரர்களை எதிர்கொண்டு இறுதிப்போட்டியை எட்டினார்.

இறுதிப்போட்டியில் சீன வீராங்கனையுடன் மோதிய நிலையில் திடீர் உடல் நல சோர்வால் இறுதிப்போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை இந்தியாவிற்காக பெற முடிந்தது.

இந்த வெற்றியை இந்தியாவிற்கு பெற்று தந்த அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து செய்திகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழகத்திற்கு திரும்பிய வெள்ளி மங்கை துளசிமதி முருகேசனுக்கு காஞ்சிபுரத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த ஒரு வாரமாக திமுக கழக பணியில் இருந்த திமுக மாநில மாணவர் அணி செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் பதக்கம் வென்ற துளசிமதியை இன்று நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். 

கடந்தமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, இது போன்ற விளையாட்டு வீரர் , வீராங்கனைகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறந்த தரத்துடன் விளையாட்டு மைதானங்கள் கேலரி என சட்டமன்றத்தில் பேசி அதிக நிதி பெற்று அமைத்து கொடுத்துள்ளார்.

கடும் மழைக் காலங்களிலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் நீர் தேங்கா வண்ணம் கட்டமைப்பு செய்யப்பட்ட முதல் மைதானம் ஆகும் இது. 

மேலும் எந்த ஒரு விளையாட்டுப் போட்டிக்கு அழைத்தாலும் உடனடியாக அங்கு சென்று விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி மற்றும் தனது வீட்டுக்கு அருகே வசிக்கும் இந்த வீர மங்கைக்கு பலமுறை  நற்சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் அளித்து அவரை உற்சாகப்படுத்தியதும் , பலவீரருக்கு இவரும் முன் உதாரணமாக திகழ்வதாக பேசியும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News