காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 385 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 2,44,203 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத நிலையில் உள்ளனர்.

Update: 2022-03-04 14:15 GMT

பைல் படம்.

கொரோனா மற்றும் அதைச்சார்ந்த ஓமிக்ரான் நோயைத் தடுப்பதற்காக 15 வயதிலிருந்து 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி நாளை  05.03.2022 சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 15 லிருந்து 18 வயதுடைய குழந்தைகளுக்கும் கோவாக்சின் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. நம்முடைய குடும்பத்தினரும் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்க நாம் ஒவ்வொருவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா என்ற கொடிய நோயை அறவே ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி ஆகும்.

எனவே நாளை 05.03.2022 சனிக்கிழமை அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்படுத்தபட்ட 385 மாபெரும் தடுப்பூசி முகாம்களில் நடைபெறும் முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News