காஞ்சிபுரம் அருகே திறந்த வெளியில் அமர்ந்து மருந்து வழங்கும் ஊழியர்கள்

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் சிதலமடைந்ததால் திறந்த வெளியில் வைத்து மருந்து வழங்கப்படுகிறது.

Update: 2022-09-23 07:45 GMT

ஏனாத்தூர் கிராமத்தில் திறந்தவெளியில் அமர்ந்து மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஊழியர்கள் மருந்து வழங்கினர்.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது ஏனாத்தூர் கிராமம். வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கீழ் இந்த கிராமத்தின் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு  சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருவதால் அவர்களின் மருத்துவ தேவைக்காக கடந்த காலங்களில் ஆரம்ப சுகாதாரம் நிலையம் அங்கு அமைக்கப்பட்டு மருத்துவம் சேவை செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது அந்த ஆரம்ப சுகாதார நிலையம் சிதலமடைந்து பராமரிப்பின்றி காணப்படுவதால் ஊழியர்கள் அதனுள் சென்று மருத்துவ சேவை செய்ய அச்சப்படுகின்றனர். மேலும் அதன் பயன்பாட்டு குறைந்து வந்ததால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அங்கு தங்கி உள்ளதாகவும் அச்சப்பட்டு அதன் அருகே உள்ள இ சேவை மைய வளாகத்தில் அமர்ந்து பொதுமக்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துகளை வழங்குதல்  மற்றும் சுகாதாரத் துறை சார்பில் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர்.

மேலும் இ-சேவை மையத்தின் ஒரு பகுதியை தங்களுக்கு அளித்தால் மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ளவும் உரிய நேரத்தில் வழங்கவும் ஏதுவாக இருக்கும் என கோரிக்கை வைக்கின்றனர். அதனைத் தொடர்ந்து கிராம மக்களின் மருத்துவ சேவை நலன் கருதி புதிய ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.


Tags:    

Similar News