உள்ளாட்சி தேர்தல் பயிற்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெறுவதால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-23 11:45 GMT
பைல் படம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் ஆயிரத்து 280 ஒரு வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் பணிபுரிய 10 ஆயிரத்து 433 அரசு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் முதல் கட்ட தேர்தலுக்கு 1659 அரசு ஊழியர்கள் இரண்டாம் கட்ட தேர்தலுக்கு நாள் 1774 அரசு ஊழியரும் பணிபுரிய உள்ளனர்.

இதில் குறிப்பாக  பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக  பணிபுரிய உள்ளனர்.தற்போது 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருவதால் ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

நாளை அந்தந்த ஒன்றியங்களில் உள்ள கல்லூரிகள்,  கூட்ட அரங்கம் ஆகியவற்றில் ஒரு நாள் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதால் ஆசிரியர்கள் அனைவரும் அங்கு செல்லும் கட்டாயத்தில் உள்ளதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News