2 ஆண்டுகளாக சாய்ந்து கிடக்கும் வழிகாட்டி பலகை, நூலகத்துறை சரிசெய்யுமா ?

காஞ்சிபுரத்தில் 2 ஆண்டுகளாக சாய்ந்து கிடக்கும் வழிகாட்டி பலகையை நூலகத்துறை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-08-12 12:00 GMT

நூலகத்திற்கு செல்ல வழி காட்டும் பலகை கடந்த இரண்டு ஆண்டுகளாக சாய்ந்து உள்ளது. 

நூலகம் இளைஞர்களின் வாழ்வை திசை திருப்பும் இடமாக இருந்து வருகிறது. பல்லாயிரக் கணக்கான புத்தகங்கள் இளைஞர்களின் அறிவையும் அவர்களது வாழ்வின் வழிகாட்டியாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று நூலக தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் எஸ் ஆர் அரங்கநாதனின் 129 வது பிறந்த தினத்தை  நூலகத்துறை  நூலகங்களில் புரவலர் சேர்ப்பு , உறுப்பினர் சேர்க்கை என இன்று சிறப்பாக கொண்டாடி வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அம்மா உணவகம் அருகே அமைந்துள்ள அறிஞர் அண்ணா  நூலகத்திற்கு அதிக வாசகர்கள் வருவதால் வாசகர்கள் மேம்பாட்டுக்காக புதிய கட்டிடம் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில் விளக்கடி கோயில் தெருவில் உள்ள சாலை சந்திப்பில் அண்ணா நூலகத்திற்கான வழிகாட்டி பலகை கடந்த இரண்டு வருடங்களாகவே சரிந்து சாலையோரம் கிடைக்கிறது.

இதற்கும் நூலகத்திற்கும் சுமார் 50 மீட்டர் தூரமே உள்ள நிலையில் இதனை கடக்கும் வாசகர்கள் அனைவரும் இதனை நூலகத் துறை ஊழியர்கள் கவனிக்கவில்லை எனும் மனக்குறை அவ்வழியாக செல்வோருக்கு ஏற்படும்  நிலை உள்ளது.

இதுகுறித்து அப்பகுதிவாசிகள் தெரிவிக்கையில் கடந்த இரண்டு வருட காலமாகவே இந்நிலையில்தான் உள்ளது. அரசின்  அலட்சியமாகவே இது பார்க்கப்படுகிறது..

பல்வேறு கட்டுமானங்கள் பல மாதங்கள் நடைபெறும் வழிகாட்டி பலகை ஒரு கை சிமெண்ட் கிடைக்கவில்லையா என வாசகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அரசு உடனே சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News