காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில்: கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி..!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழாவில் வடகலை பிரிவினரும் வேத பாராயணம் பாட அனுமதி உயர்நீதிமன்றம் அளித்தது

Update: 2022-05-18 14:15 GMT

ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவத்தில் பாடல் பாடி வந்த வடகலை மற்றும் தென்கலை கோஷ்டினர்.



காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தென்கலை பிரிவினர் மட்டும் பிரபந்தம் பாட அனுமதித்து கோயில் உதவி ஆணையர் கடந்த 14ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து வடகலை பிரிவை சேர்ந்தவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இவ் வழக்கு விசாரணை மேற்கொண்ட பின்,  நீதிபதி தனது உத்தரவில் ஒரே கடவுளை வழிபட இரு பிரிவினருக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை எனவும், முதல் மூன்று வரிசைகளில் தென்கலை பிரிவினரும் அவர்களுக்கு பின்னர் வடகலை பிரிவினரும் சாதாரண பக்தர்களும் அமர அனுமதிக்க வேண்டும் எனவும் நேற்று உத்தரவிட்டார். இந்நிலையில் மாலை நடைபெற்ற யானை வாகனத்தில்  எழுந்தருளிய பெருமாள் தீப ஆராதனைக்கு பின், நீதிமன்ற உத்தரவின் படி வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் பாடல்களை பாடினர்.

இச்சம்பவங்கள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்து உயர்நீதிமன்றத்தில்  சமர்பிக்க உத்தரவிட்டதால் நிகழ்ச்சி இந்து சமய அறநிலைத்துறையால் வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்டது. இரு தரப்பினருக்கும் அமைதியை ஏற்படுத்தும் வழியில் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு பாடல்கள் பாடுவதில்  பிரச்சனையும் இன்றி  முடிவுற்றதால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News