அண்ணா பிறந்த நாள் முதல் காஞ்சிபுரம் பட்டு பூங்கா செயல்படும்: அமைச்சர் காந்தி

வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு பூங்கா 25% பணிகளுடன் துவங்கும் எனவும் அண்ணா , கலைஞர் கண்ட கனவை காஞ்சியில் திமுக அரசு நிறைவேற்றும் என தெரிவித்தார்.

Update: 2021-06-11 11:23 GMT

காஞ்சிபுரம் அண்ணா பட்டு பூங்காவை அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறிஞர் அண்ணா பட்டு பூங்கா அமைக்கும் பணி கடந்த 2009இல் மத்திய அரசு பங்களிப்புடன் துவங்கியது. இன்று வரை தனது செயல்பாட்டை  துவங்காத நிலையில் இருந்தது. திமுக ஆட்சியமைத்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டலின் பேரில் பட்டுப் பூங்கா பணிகளை இன்று தமிழக கைத்தறி துணிநூல் அமைச்சர் காந்தி ஆய்வு மேற்கொண்டார்.

இப் பூங்காவில் அமைக்கப்படவுள்ள தறி கூடங்கள், சாயத் தொழிற்சாலை உள்ளிட்டவைகள் குறித்து துறை அதிகாரிகள் பட்டுப் பூங்கா நிர்வாகிகள் என பலர் அமைச்சருக்கு எடுத்துரைத்தனர். அதன் பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் இப்பணி குறித்த விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.

இதன்பின் செய்தியாளரிடம் பேசிய கைத்தறி துணிநூல் அமைச்சர் காந்தி, வரும் செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று முதல்கட்ட பணிகள் பட்டுப் பூங்காவில் துவங்கப்படும். தொடர்ந்து பணிகள் கண்காணிக்கப்பட்டு விரைவாக பட்டுப் பூங்கா பணிகள் அனைத்தும் நிறைவு பெறும்.

அண்ணா பிறந்த காஞ்சி நெசவாளர்களின் மேம்பாட்டு கனவை பட்டு பூங்கா துவக்கி கலைஞர் நிறைவேற்றினார். கலைஞரின் கனவை தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி நெசவாளர்கள் வளம் பெறுவார்கள் என தெரிவித்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ,  கைத்தறித் துறை முதன்மை செயலாளர் அபூர்வா ஆணையர் பீலா ராஜேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News