காஞ்சிபுரம் : ரூ 24 லட்சம் மதிப்பிலான பான் மசாலா பொருட்கள் பறிமுதல்

காஞ்சிபுரத்தில் ரூ 24 லட்சம் மதிப்புள்ள பான் மசாலா, குட்கா பொருட்கள் மற்றும் 5 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-01-23 15:00 GMT

காஞ்சிபுரம் மாவட்ட போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 24 லட்சம் மதிப்பிலான பான் மசாலா, போதைப் பொருட்கள்.

காஞ்சிபுரம் தாலுக்கா காவல் எல்லைக்குட்பட்ட வேலூர் to சென்னை தேசிய நெடுஞ்சாலை தாமரைதாங்கல் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே இன்று சந்தேகபடும்‌ வகையில் டாடா லாரி நின்று கொண்டு இருப்பதாக சிவ காஞ்சி காவல் உதவி ஆய்வாளருக்கு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான குட்காவை லாரியிலிருந்து இரண்டு மினி வாகனத்தில் குட்காவை மாற்றிக் கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.

அப்போது அங்கு வந்த காஞ்சிபுரம் சிவ காஞ்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணாமூர்த்தி மற்றும் இரண்டு காவலர்கள் சென்று மேற்படி வாகன ஓட்டுநர்களான சென்னையை சேர்ந்த சசிகுமார் மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த பழனிவேல் ஆகிய இருவரையும் பிடித்தனர்.

இவர்களிடம் இருந்த மற்றொரு இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காஞ்சி தாலுக்கா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து அவர்களிடம் மேற்படி வாகனம், பொருட்கள் மற்றும் நபர்களை ஒப்படைக்கப்பட்டார்.

இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து அவர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்து லாரி,2மினிவேன், இருசக்கர வாகனம் உள்ளிட்டவகைகளும் பறிமுதல் செய்தனர்.

லாரியில் பேன், குக்கர் பாக்ஸ்களுக்கு இடையில் தடை செய்யப்பட்ட பான் பொருள்களை அடுக்கிவைத்து கடத்தி வந்துள்ளனர். இவைகளின் மதிப்பு சுமார் 24 லட்சமும், பான் பொருட்களின் மதிப்பு 5லட்சமும் இருக்கும் என தகவல் தெரிவிக்கிறது.

இது தொடர்பாக சிறப்பாக பணியாற்றிய போலீசாரை போலீஸ் எஸ்பி சுதாகர் பாராட்டினார்.

Tags:    

Similar News