காஞ்சிபுரம்:விதிகளை மீறிய கடைகளுக்கு சீல் வைப்பு-அபராதம்!

காஞ்சிபுரத்தில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி அபராதம் விதித்தார்.

Update: 2021-06-12 10:07 GMT

விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு காஞ்சிபுரம் நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த காட்சி.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால்  தொற்று பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. தமிழக முதல்வர் வரும் திங்கட்கிழமை முதல் சில நிறுவனங்களுக்கு தளர்வுகள் அறிவிதித்துள்ளார்.

தளர்வுகள் அறிவிக்கப்பட்ட கடைகளை இன்றே காஞ்சிபுரம் நகரில் செங்கழுநீரோடை வீதி , மேற்கு ராஜ வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்தனர்.

இதைக்கண்ட சமூக ஆர்வலர் உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்ததன் பேரில் காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி மேற்கண்ட தெருக்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு நகைக்கடை பாத்திரக்கடை மற்றும் துணிக்கடைகள் , கண் கண்ணாடி கடை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு ஊரடங்கு விதிகளை மீறியதாக சீல் வைத்து அபராதம் விதித்தார்

இன்னும் ஓரிரு நாளில் திறக்க அனுமதிக்கப்பட்ட கடைகள் இன்று திறக்கப்பட்டது காஞ்சிபுரம் நகரில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

Tags:    

Similar News