காஞ்சிபுரம்: வளர்ச்சிப் பணிகள் குறித்து திட்ட இயக்குனர் ஆய்வு

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் முன்மாதிரி ஊராட்சிகளாக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2022-05-21 12:00 GMT

மேல்கதிர்பூர் கிராம ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் ஸ்ரீதேவி.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில், 40 ஊராட்சிகள் உள்ளன. இதில், மேல்கதிர்பூர், முத்துவேடு ஆகிய இரு ஊராட்சிகள் முன்மாதிரி ஊராட்சிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இரு ஊராட்சிகளிலும், திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற திடக்கழிவு, திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தில் முன்னோடியாக மாற்ற ஊரக வளர்ச்சித் துறை மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி  திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது, தனி நபர் உறிஞ்சு குழிகள், சமுதாய உறிஞ்சு குழிகள், தனிநபர் கழிப்பிடம், மஹாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட பணிகள், நுண்ணியிர் தயாரிப்புக் கூடம், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, பசுமை வீடுகள், பிரதம மந்திரி வீடுகள் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீதா சீனிவாசன் ,  பாலாஜி, உதவி பொறியாளர் சகுந்தலா தேவி, சுப்புராஜ் பணி மேற்பார்வையாளர் கார்த்திகாதேவி,  சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், மேல் கதிர்பூர் ஊராட்சி மன்ற தலைவர் பேபி,  முத்துவேடு ஊராட்சி மன்ற தலைவர் ஜெனிட்டா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News