காஞ்சிபுரம் :மருத்துவ அவசர தேவைக்கு இலவசமாக வாகனம் வழங்கிய ஊராட்சி தலைவி

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் ஊராட்சி மக்களின் மருத்துவ அவசர தேவைக்கு இலவசமாக பயன்படுத்த பஞ்சாயத்து தலைவி சொந்த வாகனத்தை வழங்கினார்.

Update: 2021-10-23 13:00 GMT

காலூர் ஊராட்சியில் பொதுமக்கள் மருத்துவ சேவைக்காக செல்ல உதவியாக நான்கு சக்கர வாகனத்தை ஓப்படைத்தார் புதிய ஊராட்சி தலைவர்.

 ஊரக உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காலூர்  கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சகுந்தலா சங்கர் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் வாக்கு சேகரிப்பின் போது கிராம மக்களுக்கு மருத்துவ சேவை உறுதிப் படுத்தப்படும் எனவும் அதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி ஊராட்சி மன்ற தலைவராக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொறுப்பேற்ற பின் தற்போது கிராம மக்கள் அவசர மருத்துவ சேவைக்கு 108 அழைப்புக்கு காத்திருக்காமல் உடனடியாக மருத்துவ உதவி கிடைக்கும் வகையில் தனது நான்கு சக்கர வாகனமான ஓம்னி வாகனத்தை பொதுமக்களுக்கு பயன்படுத்த இலவசமாக ஊராட்சியில் ஒப்படைத்தார்.

கால தாமதமின்றி மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் இது போன்ற செயலை செய்த கிராம ஊராட்சி மன்ற தலைவி அப்பகுதியில் பெரும் வரவேற்பு கூடியுள்ளது.

Tags:    

Similar News