காஞ்சிபுரம்: உரத்தட்டுப்பாடு தொடர்பாக புகார் அளிக்க கண்காணிப்பு மையம்

காஞ்சிபுரம் கண்காணிப்பு மைய தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்

Update: 2021-09-23 14:30 GMT

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது சம்பா பருவ நெற்பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது. சாகுபடிக்கு தேவையாக தற்போது 1217 மெட்ரிக்டன் யூரியா, 437 மெ.டன் டி.ஏ.பி, 417 மெ.டன் பொட்டாஷ், 1402 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியார் உரக்கடைகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் விற்பனைக்கு தயாராக இருப்பில் உள்ளது.மேலும், தீவிர சாகுபடி காலங்களில் உரம் பதுக்கல், தட்டுப்பாடு, கூடுதல் விலைக்கு விற்பனை போன்றவற்றை தடுக்க மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உரம் கண்காணிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்கப்படும் இந்த மையத்தினை 044-2722977 அல்லது 97909 69180 எண்ணில் தொடர்பு கொண்டு அனைத்து வகை உரங்கள் விற்பனை, விநியோகம், கூடுதல் விலைக்கு விற்பனை, பதுக்கல், தட்டுப்பாடு, கிடைப்பதில் தாமதம் போன்றவற்றில் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக விவசாயிகள் நேரிலோ (அல்லது) கண்காணிப்பு மையம் தொடர்பு எண்ணினை தொடர்பு கொண்டோ தெரிவிக்கலாம்.இது தவிர அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களையும் தொடர்பு கொண்டு புகார்கள் அளிக்கலாம்.

சிறுகாவேரிப்பாக்கம் - 77083 26919, வாலாஜாபாத் - 99520 44049, உத்திரமேரூர் - 77086 11066, திருப்பெரும்புதூர் மற்றும் படப்பை -94441 73891         ஆகிய தொடர்பு எண்ணிலும் புகார்கள் அளிக்கலாம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News