காஞ்சிபுரம் கலெக்டர் தலைமையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி!

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Update: 2021-06-11 10:50 GMT

தேசிய குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி தலைமைரியல் அலுவலர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்ட காட்சி.

வருடந்தோறும் ஜூன் 11ஆம் தேதி தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

இதில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வீட்டு வேலையை ஈடுபடுத்தமாட்டோம் , இரட்டை குழந்தைகளை உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் வேலைக்கு அமர்த்த விடமாட்டோம். குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்புவோம் எனும் உறுதிமொழியும், இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உறுதுணை புரிவோம் எனவும் அனைத்து அலுவலகம் உறுதி மொழி ஏற்றனர்.

Tags:    

Similar News