சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள்

வைகாசி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் மாலை உற்சவத்தில் அரக்கு பட்டு உடுத்தி பல வண்ண மாலைகள் சூடி வரதர் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார்

Update: 2023-06-01 15:06 GMT

பிரம்மோற்சவ  இரண்டாம் நாள் விழாவில் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்தார் காஞ்சி வரதராஜ பெருமாள்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சத்தில் இரண்டாம் நாள் மாலை அரக்கு பட்டுடுத்தி சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி மாநகர் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றம் நிறைவு பெற்ற  பின் தங்க சப்பர வாகனத்திலும் , மாலை சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி காஞ்சி மாநகர் வீதியில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இன்று இரண்டாம் நாள் உற்சவத்தில் காலை ஹம்ச வாகனத்திலும், தற்போது மாலை உற்சவத்தில் அரக்கு வண்ண பட்டுடுத்தி பல வண்ண மாலைகள் சூடி சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி காஞ்சி மாநகர் வீதிகளில் வலம் வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


மாலை வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது . வேத நாராயண கோஷ்டிகள் பாடல்கள் பாட , மேள தாளங்கள் முழங்க   செல்லும் வழி நெடுகிலும் பக்தர்கள் ஸ்ரீ வரதராஜ பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்திருளிய திருக்கோலத்தை கண்டு தரிசித்து இறை அருள் பெற்று சென்றனர்.

நாளை அதிகாலை முக்கிய நிகழ்வான கருட சேவை வாகனத்தில் கோபுர தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

பிரம்மோற்சவ விழாவினையொட்டி காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு போக்குவரத்து மாற்றங்கள் சாமி வீதி உலா வழிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கருட சேவை நிகழ்வினையொட்டி திருக்கோயில்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News