கலைஞர் வீட்டு வசதி திட்டம் மறு கணக்கெடுக்கும் பணி : கலெக்டர் ஆர்த்தி ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் கலைஞர் வீட்டு வசதி திட்டம் மறு கணக்கெடுப்பு பணிகளை கலெக்டர் ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-01-24 11:30 GMT

காஞ்சிபுரத்தில் கலைஞர் வீட்டு வசதி வாரிய திட்டத்தில் மறு கணக்கெடுப்பு பணியை கலெக்டர் ஆர்த்தி ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அமரம்பேடு, கோவூர், கெருகம்பாக்கம் மற்றும் சிக்கராயபுரம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றுவரும் கலைஞர் வீட்டு வசதி திட்டம் மறு கணக்கெடுப்பு பணிகளை, கணக்கெடுப்பு குழுவினரால் இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட செயலி மூலம் மேற்கொள்ளப்படும் கணக்கீட்டு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 4,485 பயனாளிகளுக்கும், உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6,371 பயனாளிகளுக்கும், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் 5,024 பயனாளிகளுக்கும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 4,564 பயனாளிகளும், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 7,838 பயனாளிகளுக்கும் என காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் ஏற்கனவே 28,282 வீடுகள் கணக்கு எடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தற்போது கணக்கெடுப்பு பணி குழுக்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஊராட்சி செயலர் மற்றும் வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர் (PLF) ஆகிய இரண்டு நபர்களை கொண்ட 293 கணக்கெடுப்பு குழுக்கள் மற்றும் இப்பணிகளை மேற்பார்வையிட 225 அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்

இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் .ஸ்ரீதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News