உத்திரமேரூர் ஒன்றியத்தில் 1076 பேருக்கு 100 நாள் வேலைவாய்ப்பு அட்டை வழங்கல்

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 1076 பேருக்கு 100 நாள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை எம்எல்ஏ வழங்கினார்.

Update: 2022-04-12 02:30 GMT

சாலவாக்கம் கிராம ஊராட்சி சார்பாக 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாளர் அடையாள அட்டையை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை சார்பில் 100 நாள் வேலைவாய்ப்பு என அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அந்தந்த கிராம ஊராட்சியில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முறையான அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

பணி நடைபெறும் இடத்தில் அடையாள அட்டையுடன் வந்து பணி செய்து அதற்கான உறுதியை செய்து கொள்வதற்கு இந்த அட்டை பயன்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் எழுவதை தவிர்க்க புதிய தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணியாளர் அடையாள அட்டை வழங்கும் பணி அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் ஊராட்சி செயலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அவ்வகையில் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலவாக்கம் ஊராட்சியில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGS) பணியாளர்கள் 1076 நபர்களுக்கு வேலை அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சாலவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சக்திவேல்  தலைமையில் நடைபெற்றது.

இதில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தொடர்ந்து 1மணி நேரம் பணியாளர்கள் 1076 நபர்களுக்கும் வேலை அடையாள அட்டைகளை வழங்கினார்.

இந்நிகழ்சியில், ஒன்றிய செயலாளர் திரு.T.குமார் , கூட்டுறவு வங்கி இயக்குநர் S.R.வெங்கடேசன், மாவட்ட கவுன்சிலர் ,  G.சிவராமன், ஒன்றிய கவுன்சிலர் P.சேகர்,  ஊராட்சி மன்ற துணைத்தலைவர் E.நந்தாமற்றும் சாலவாக்கம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News